2026: மகாசிவராத்திரி நாளில் நடக்கும் முக்கிய பெயர்ச்சி.. பொன் பொருள் சேர்க்கை யாருக்கு?

Astrology 12 Rasi Palangal Tamil Lord Shiva
By Sakthi Raj Feb 15, 2026 08:57 AM GMT
Report

 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சில கிரகங்களின் இட மாற்றம் நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட சிலர் ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் நன்மை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.

அதாவது புதன், செவ்வாய் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று தங்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். புதன் பகவான் சதய நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார்.

அதோடு செவ்வாய் மற்றும் சந்திர பகவான் அவிட்ட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் செவ்வாய் சந்திரனின் இந்த இடமாற்றமானது மூன்று ராசிகளுக்கு மிகப் பெரிய அளவில் நன்மையை உண்டு செய்ய போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: மகாசிவராத்திரி நாளில் நடக்கும் முக்கிய பெயர்ச்சி.. பொன் பொருள் சேர்க்கை யாருக்கு? | 2026 Feb 15 Puthan Sevvai Santhiran Peyarchi Palan

2026 மார்ச் 3க்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

2026 மார்ச் 3க்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

மேஷம்:

மேஷ ராசியினருக்கு நிச்சியம் அவர்களுடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடக்கூடிய காலமாக அமையப்போகிறது. திடீர் என்று ஒரு நொடியில் அவர்கள் வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறும் அமைப்பை இவர்கள் பெறப் போகிறார்கள். அலுவலகத்தில் சந்தித்து வந்த சிறு சிறு பிரச்சனைகளும் விலகும். வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காலம். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு மூன்று கிரகங்களுடைய மாற்றமானது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. பணி இடங்களில் சந்தித்து வந்த வேலை பளு குறையப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை இவர்கள் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களால் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகப்போகிறது. திருமணத்திற்காக வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தடைகள் யாவும் விலகி நல்ல வரன் அமையப்போகிறது. உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு சென்று பயிலக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

சனி வீட்டில் சூரியன்.. இன்னும் 4 நாட்களில் இவர்கள் தலையெழுத்தே மாறப்போகிறது

சனி வீட்டில் சூரியன்.. இன்னும் 4 நாட்களில் இவர்கள் தலையெழுத்தே மாறப்போகிறது

மகரம்:

மகர ராசியினருக்கு இந்த மூன்று கிரகங்களுடைய மாற்றமானது நிச்சயம் அவர்களுடைய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஒரு நல்ல நேர்மறையான மாற்றத்தை கொண்டு சேர்க்கப் போகிறது. வாழ்க்கை துணையின் குடும்பத்திலிருந்து வந்த மனக்கசப்புகள் யாவும் விலகும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் பெருகும். நீண்ட நாட்களாக உங்கள் கைகளுக்கு வராத சொத்துக்களை நீங்கள் பெற போகிறீர்கள் . ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் எல்லாம் விலகப் போகிறது.