காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது - பதவி விலக உள்ள செல்வப்பெருந்தகை
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
The Central Election Committee of the Congress has selected the following persons as party candidates for the elections to the Legislative Assembly of Tamil Nadu👇 pic.twitter.com/H3e2e2uw9x
— Congress (@INCIndia) April 3, 2026
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த மார்ச் 28 ஆம் திகதி கட்சியில் இணைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜிகேஎம் தமிழ்குமரன் பென்னகரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாமக(ராமதாஸ் தரப்பு) தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஆவார்.

இதில், குளச்சல் பிரின்ஸ் உள்ளிட்ட 5 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 27 வேட்பாளர்களில் 2 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு மற்றும் குளச்சலில் தாரகை கத்பர்ட் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கட்சிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
— Jothimani (@jothims) April 3, 2026
வேட்பாளர்கள் முன்பே… pic.twitter.com/dmtV5mPVES
மேலும், தேர்தலுக்கு பின்னர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2 ஆண்டுகள் மனநிறைவோடு பணி செய்தேன். தேர்தல் முடிந்து வெற்றி வாகை சூடி அந்த வெற்றிக் கனிகளை ராகுல்காந்தியிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் மட்டும்தான் மக்கள் பணி செய்வேன்." என தெரிவித்துள்ளார்.
பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம் IBC Tamil
அடுத்த நிமிடமே முடிவிற்கு வரப்போகும் ஈரான் யுத்தம் ..! மூன்று வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..! IBC Tamil