திமுகவின் இளம் மற்றும் அதிக வயதுடைய வேட்பாளர்கள் யார்?
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் இளம் மற்றும் அதிக வயதுடைய வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான164 வேட்பாளர்கள் அடங்கிய திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதில், 18 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 முனைவர்கள், 29 சட்டம் படித்தவர்கள், 15 மருத்துவர்கள் என 125 பட்டம் பெற்றவர்கள் உள்ளனர்.
அமைச்சர்களாக உள்ள பொன்முடி, மனோ தங்கராஜ், காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதில், 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இளம் திமுக வேட்பாளர்

இதில், அவிநாசி(தனி) தொகுதியில் போட்டியிடும் 26 வயதான மருத்துவர் கோகிலா மணி திமுகவின் இளம் வேட்பாளராக அறியப்படுகிறார். இவர் எம்.பி.பி.எஸ் முடித்துள்ள மருத்துவர் ஆவார்.
அதிக வயதுடைய திமுக வேட்பாளர்
திமுகவின் அதிக வயதுடைய வேட்பாளராக அமைச்சர் துரைமுருகன் உள்ளார். 86 வயதான துரைமுருகன், 10வது முறையாக காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதில், 1984 மற்றும் 1991 தேர்தல்களில் மட்டும் தோல்வியடைந்துள்ளார். 1971 முதல் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன், 1977 மற்றும் 1980 தேர்தல்களில் மட்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.