ஹனிமூனுக்கு இதுதான் சிறந்த இடங்கள் - உங்க சாய்ஸ் எது?

Tourism Indonesia Marriage Maldives
By Sumathi Jan 20, 2026 11:31 AM GMT
Report

தேனிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற உலகின் சிறந்த டாப் இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

சிறந்த தேனிலவு இடங்கள்

அதன்படி காடுகளும் கடலும் சந்திக்கும் இந்தோனேசியாவின் பாலி தீவு முதலாவது இடத்தை பிடித்துள்ளது. மலர் குளியல் மற்றும் சாகசப் பயணங்களுக்கு இது மிகவும் பெயர் பெற்றது.

ஹனிமூனுக்கு இதுதான் சிறந்த இடங்கள் - உங்க சாய்ஸ் எது? | 2026 Best Tourist Spot Honey Moon Place Tamil

  இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மொரிஷியஸ் தீவு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 7 வண்ண மண் (Chamarel Seven Colored Earths) மற்றும் படகுப் பயணங்களுக்காக இந்த தீவு விரும்பப்படுகிறது.

மூன்றாவதாக கடலுக்கு நடுவே உள்ள வில்லாக்கள் மற்றும் கடற்கரை இரவு உணவுகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவு.

நான்காவதாக நீர்வீழ்ச்சிகளுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் தங்கும் விடுதிகளுக்கு பெயர் பெற்ற கரீபியன் கடலின் புனித லூசியா என்ற இடம்.

IRCTC: ஜாலியா துபாய் சுற்றுலா - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

IRCTC: ஜாலியா துபாய் சுற்றுலா - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

ஐந்தாவதாக இலங்கையின் காலி நகரம். இதனையடுத்து ஆறாவதாக வியட்நாமின், ஹுயே (Hue) என்ற இடம் ஏழாவதாக கலிபோர்னியா, நாபா (Napa) எட்டாவதாக இத்தாலியின் போசிடானோ (Positano),

ஒன்பதாவதாக கென்யாவின் வடாமு (Watamu), பத்தாவதாக ஆன்டிகுவா (Antigua) ஆகிய இடங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன