2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போகும் தவெக? அப்போ திமுக!
2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
2026 சட்டசபை
தமிழ்நாடு 2021 சட்டசபை தேர்தலில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் 133 தொகுதிகளை வென்றது. திமுக கூட்டணி மொத்தம் 159 தொகுதிகளில் வெற்றி கண்டது.
பாஜக - அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி திமுக - 31%, தமிழக வெற்றிக் கழகம்- 23%, அதிமுக - 23%, பாஜக - 18%, நாம் தமிழர் - 5% வாக்குகளை வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு
முன்னதாக லோக்சபா தேர்தலில் வெளியிட்ட கணிப்பில், திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 32 சதவிகிதம் பேர் குறிப்பிட்டனர். ஆனால் 46.97 பேர் அந்த தேர்தலில் வாக்களித்தனர். அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 21 சதவிகிதம் பேர் குறிப்பிட்டனர்.
23.05 சதவிகிதம் பேர் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். அதே சமயம் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 22 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். பாஜக கூட்டணிக்கு இதில் 18.28 பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.