2025 UPSC தேர்வு முடிவு - 10 ஆண்டுக்கு பிறகு சாதனை படைத்த தமிழக மாணவர்கள்

Tamil nadu
By Karthikraja Mar 06, 2026 02:24 PM GMT
Report

2025 UPSC தேர்வு முடிவில், 10 ஆண்டுக்கு பிறகு தமிழக மாணவர்கள் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளனர்.

2025 UPSC தேர்வு முடிவு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட நாட்டின் குடிமை பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம்(UPSC) நடத்தும் 2025 சிவில் சர்விசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

தேர்வு எழுதியவர்களில், நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த மருத்துவரான அனுஜ் அக்னிகோத்ரி, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த ராஜேஸ்வரி சுவி, அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதித்துள்ளார். 

2025 UPSC தேர்வு முடிவு - 10 ஆண்டுக்கு பிறகு சாதனை படைத்த தமிழக மாணவர்கள் | 2025 Upsc Result Tamilnadu Students Enter In Top10

இவர் TNPSC நடத்திய குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11வது இடம் பிடித்து, தற்போது துணை ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், சென்னையை சேர்ந்த ராஜா மொஹைதீன் என்பவர் அகில இந்திய அளவில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுருதி 18வது இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து தேர்ச்சி 56 பேரில் 39 பேர் அரசின் தேர்ச்சி மையத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்தவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர் என அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மைய முதல்வர் சங்கர சரவணன் தெரிவித்துள்ளார். 

நான் முதல்வன் திட்டம்

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சாதிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இது போட்டி தேர்வுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. 

2025 UPSC தேர்வு முடிவு - 10 ஆண்டுக்கு பிறகு சாதனை படைத்த தமிழக மாணவர்கள் | 2025 Upsc Result Tamilnadu Students Enter In Top10

இதற்கான நான் முதல்வன் திட்ட தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு முதல்நிலைத் தேர்விற்கு தயாராகும் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு. 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வுக்கு தயாராபவர்களுக்கு ரூ.25000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.