மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷித் கான் - அம்பானி குடும்பம் அதிரடி முடிவு
மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
SA20 கோப்பை
2024 ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக இருந்தவர் ரஷித் கான். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
எனவே ரஷித் கான் மும்பை கேப் டவுன் அணிக்கு முதல் SA20 கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷீத் கான்
ரஷீத் கான் நடப்பு SA20 2025 தொடரில் பென் ஸ்டோக்ஸ், டிரென்ட் பவுல்ட் மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களால் நிறைந்த அணியை வழிநடத்துவார். ரஷீத் இல்லாத கடந்த ஆண்டு கீரன் பொல்லார்ட் கேப்டனாக பொறுப்பேற்றார்.
ஆனால் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் கடைசி இடத்தில் முடிந்தது. முதல் சீசனில் அணியை வழிநடத்திய ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்,
இரண்டாவது சீசனில் முதுகு காயத்தால் விலகிய பின்னர், மீண்டும் கேப்டன் பதவிக்குத் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.