2010 சம்பவம் நியாபகம் இருக்கா? சிஎஸ்கே வெல்லும் - CEO காசி விஸ்வநாதன் சொல்றதை பாருங்க
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டெழும் என சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சிஎஸ்கே ஃபார்ம்
நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் 6-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்க நிகழ்வில் இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன்,
“இந்த சீசனில் சிஎஸ்கே ஆட்டத்தை பார்த்து அனைவரும் ஏமாற்றம் அடைந்து இருப்பீர்கள் என தெரியும். உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கும். இதற்கு முன்பும் இது போல நடந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை நாங்கள் சிறந்த கிரிக்கெட் விளையாடவில்லை.
சிஇஓ தகவல்
ஆனால், எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அணியின் கேப்டன் தோனியாக இருப்பதால் அது நடக்கும் என்று நம்புகிறோம். கடந்த 2010-ம் ஆண்டு சீசனும் இது போல தான் இருந்தது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவினோம்.
அதன் பின்னர் கம்பேக் கொடுத்து, அந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றோம். அது தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே வென்ற முதல் பட்டம். வீரர்கள் அர்ப்பணிப்புடன் கடும் பயிற்சி மேற்கொன்டு வருகிறார்கள். அது எதிர்வரும் ஆட்டங்களில் வெளிப்படும். நாங்கள் மீண்டெழுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
2010 ஐபிஎல் சீசனில் முதல் 7 போட்டிகளில் 5 தோல்வியை சந்தித்த சிஎஸ்கே பின் அனைத்து ஆட்டங்களிலும் வென்று, இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வென்றது குறிப்பிடத்தக்கது.