ஸ்விக்கியில் 83 மில்லியன் ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது தெரியுமா? 2024-ல் இதுதான் டாப்!
2024-ல் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக ஆர்டர்
2025 புதிய வருடம் பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிரபலமான உணவு நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தனது நிறுவனத்தில் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் இந்திய மக்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் முதன்மையாக பிரியாணி உள்ளது. குறிப்பாக 83 மில்லியன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக இரண்டாவது இடத்தில் தோசை உள்ளது.ஸ்விக்கியில் 23 மில்லியன் தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.மூன்றாவது இடத்தில் உள்ளது இட்லிதான். இதை 7.8 மில்லியன் இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
எது தெரியுமா?
2024 ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் என்றால் அது சிக்கன் ரோல் ஆகும். இது சுமார 24.8 லட்சம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 16.3 லட்சம் ஆர்டர்களுடன் சிக்கன் மோமோஸ் மற்றும் 13 லட்சம் பிரெஞ்சு பிரைஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டில் ஹைதராபாத், பெங்களூரு ,சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்கள்தான் பிரியாணி ஆர்டர்களில் டாப் 3 இடங்களை பிடித்துள்ளன.