கலைஞரின் பேனா தலை குனிந்தபோதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது : முதலமைச்சர் ஸ்டாலின்
2024-ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் என்று திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
திருமண விழா:
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சிகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் நாடாளு மன்றத்தில் பிரதமர் திணறியதாக கூறினார்.
கலைஞரின் பேனா :
மதுரை எய்ம்ஸ் கட்டுமானபணி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் கலைஞரின் பேனா தலை குனிந்த போதெல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது , வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனாதான் கலைஞர் பேனா என்று கூறினார்.
டைடல் பார்க் அமைக்க கையெழுத்து போட்டதுதான் கலைஞர் பேனா தான் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், 2021-ல் தமிழ்நாட்டுக்கு விடியல் ஏற்படுத்துபோல், 2024-ல் இந்தியாவுக்கே விடியல் ஏற்படும் என தெரிவித்தார்.
இதனால் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு திமுகவினர் தயாராக வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.