Kollywood 2023 - சூப்பர்ஸ்டார் பட்டம் முதல் இமான் - SK வரை..!! வெடித்த சர்ச்சைகள்..!

Rajinikanth Vijay Trisha Rashmika Mandanna Kollywood
By Karthick Dec 22, 2023 09:24 AM GMT
Report

இந்த வருடம் இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் தமிழ் சினிமா சந்தித்த சர்ச்சைகளை ஒரு தொகுப்பாக தற்போது காணலாம்.

சூப்பர்ஸ்டார் விவகாரம்

இதில் தவிர்க்கமுடியாத முதல் சர்ச்சை சூப்பர்ஸ்டார் சர்ச்சை தான். நடிகர்கள் ரஜினி - விஜய் ஆகியோரின் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து ஒரு வருடமாகவே சண்டையிட்டு தீர்த்து விட்டனர் என்றே கூறலாம்.

2023-kollywood-controversies-that-shook-people-

இதன் வெளிப்பாடு இரு நட்சத்திரங்களின் படங்களின் வெளியீட்டின் போதும் எதிரொலித்து எனலாம். ஜெயிலர் - லியோ என இப்படமும் 600 கோடியை தாண்டி வசூலித்த நிலையில், இந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை என்னும் அளவிற்கு அவ்வப்போது தலைதூக்கி கொண்டே இருக்கின்றது.

அமீர் - ஞானவேல் ராஜா 

பருத்திவீரன் படம் தொடர்பாக பல ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பினருக்கு தகராறு மூண்டது. இருதரப்பும் மாறிமாறி கருத்துக்களை தெரிவித்த நிலையில், ஞானவேல் ராஜா முன்வந்து மன்னிப்பு கோரி, பிரச்சனையை ஒரு வகையாக முடித்துவைத்தார் எனலாம்.

2023-kollywood-controversies-that-shook-people-

அமீரின் நெருங்கிய நட்பில் இருக்கும் பல இயக்குனர்கள் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக அடுத்தடுத்த கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

பிரதீப் - கமல்

எந்த வருடத்தில் இல்லாத வகையாக இந்த ஆண்டில் தொகுப்பாளரான நடிகர் கமல் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

2023-kollywood-controversies-that-shook-people-

காரணம் போட்டியாளர் பிரதீப் ஆண்டனியின் ரசிகர்கள். ரெட் கார்டு கொடுத்து முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப்பை வெளியேற்றியது, சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அடுத்த வார நிகழ்ச்சியில், கமல் தன் மீது வந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமும் கொடுத்தார்.

திரிஷா - மன்சூர் அலி கான்

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தெலுங்கு நடிகர்கள் பலரும் கூட நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர்.

2023-kollywood-controversies-that-shook-people

மன்சூர் அலி கான் தான் எந்த வித தவறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்று கூறி, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை திரிஷா மீது தொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இமான் SK

வெற்றி கூட்டணியாக வளம் வந்த இமான் SK இருவருக்குள்ளும் ஏற்பட்ட மோதலை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. ஏனென்றால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு எந்த அளவிற்கு பெரியது.

2023-kollywood-controversies-that-shook-people-

இமான் சில இடங்களில் இது குறித்து பேசிய நிலையில், அவருக்கு அவரின் முன்னாள் மனைவி மட்டும் அவ்வப்போது பதிலளித்து வந்தார். ஆனால், இமான் நேரடியாக குற்றம்சாட்டிய நடிகர் சிவகார்த்திகேயன் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் தனது பணியில் மட்டுமே கவனசெலுத்தி வருகின்றார்.

ராஷ்மிகா DeepFake

நடிகை ராஷ்மிகா தமிழ் சினிமாவை தாண்டி செயல்பட்டு வந்தாலும், அவரும் தமிழ் படங்களில் நடித்துள்ளதால் அவரை குறித்த வீடியோ இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2023-kollywood-controversies-that-shook-people-

தொழில்நுட்பங்கள் வளருவது நன்மைக்காகவே என்று செல்லவேண்டிய காலத்தில், தேவையற்ற அற்ப விஷயங்களுக்காக இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க விஷயமே.