ஐபிஎல் இறுதி ஆட்டம்; ஸ்விக்கி காண்டம் விற்பனை - வைரலாகும் பதிவு!
ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்ற நிலையில், ஆணுறை விற்பனை குறித்து ஸ்விக்கி போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
ஐபிஎல்
2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. கடைசி பந்து வரை திரில்லாக சென்ற இப்போட்டியில், சென்னை அணி வீரர் ஜடேஜா பவுன்டரி அடித்து அணிக்கு வெற்றியை பரிசளித்தார்.
இதன் மூலம் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பை வென்று மகுடம் சூடிய அணி என்ற சாதனையை சென்னை அணி பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஸ்டேடஸ் வைத்தும், புகைப்படங்களை பகிர்ந்தும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
ஸ்விக்கி
இந்நிலையில், ஸ்விகி நிறுவனம் பிரபல ஆணுறை (Condom) விற்பனை நிறுவனமான டியூரெக்ஸ் நிறுவனத்தை டேக் செய்து போட்டு ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது.
2423 condoms have been delivered via @SwiggyInstamart so far, looks like there are more than 22 players playing tonight ? @DurexIndia
— Swiggy (@Swiggy) May 29, 2023
அதில், இன்றைக்கு நாங்கள் 2,423 ஆணுறைகளை டெலிவரி செய்துள்ளோம். இன்றிரவு களத்தில் 22 வீரர்கள் அல்ல, அதற்கும் மேல் நிறைய பேர் இருக்கிறார்கள் போல தெரிகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ட்வீட் டிரெண்டாகி அதிக லைக் மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது.