காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

By Irumporai Jul 30, 2022 10:36 AM GMT
Report

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரிவில் பளுதூக்குதலும் ஒன்று. இந்நிலையில் இன்று ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது.

காமன் வெல்த் போட்டி

இதில் இந்தியா சார்பில் சன்கித் மகாதேவ் சர்கார் பங்கேற்றார். ஸ்நாட்ச் பிரிவில் இவர் முதல் வாய்ப்பில் 107 கிலோ எடையை தூக்கினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 111 கிலோ எடையை தூக்கினார்.

அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 113 கிலோ எடை அசத்தலாக தூக்கினார். இதன்பின்னர் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது.

அதில் சன்கித் மகாதேவ் சர்கார் முதல் வாய்ப்பில் 135 கிலோ எடையை தூக்கினார். இரண்டாவது முயற்சியில் அவர் 139 கிலோ எடையை தூக்க முற்பட்டார். அப்போது அவர் எதிர்பாரத விதமாக தூக்கவில்லை. 

இந்தியாவுக்கு வெள்ளிபதக்கம்

இதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் அவர் 139 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். எனினும் அவரால் தூக்க முடியவில்லை. இறுதியில் ஸ்நாட்ச் பிரிவில் 113 கிலோ எடையும், கிளின் அண்ட் ஜெர்க் பிரிவில் அதிகபட்சமாக 135 கிலோ எடையையும் சன்கித் மகாதேவ் சர்கார் தூக்கினார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் | 2022 India Wins Silver Medal

இதன்மூலம் இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக சேர்த்து 248 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.