19 ஆண்டுகள் பின் இந்தியாவுக்கு பதக்கம் : சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

By Irumporai Jul 24, 2022 04:58 AM GMT
Report

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் களமிறங்கினர்.

நீராஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 6 சுற்றுக்களாக நடைபெறும் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா பவுலாக வீசினார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றுகளில் முறையே அதிகப்பட்சமாக 86.37 மீட்டர் தூரம் வீசி பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார். முன்னதாக கிரெனடா நாட்டை சேர்ந்த பீட்டர்ஸ் 90.46 மீட்டர் தூரம் வீசி பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீட்டித்து வந்தார்.

நான்காவது சுற்றில் 88.13 மீட்டர் தூரம் வீசி நீரஜ் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வெள்ளி பதக்கத்தை தக்க வைத்தார். தொடர்ந்து 5 வது சுற்று நீரஜ் சோப்ராக்கு பவுலாக அமைய, 6 வது சுற்றும் பவுலாக அமைந்தது.

வெள்ளி பதக்கம்

இந்த நிலையில், நீரஜ் பதக்க பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். அதேபோல், கிரெனடா நாட்டை சேர்ந்த பீட்டர்ஸ் தங்கப்பதக்கமும், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜூலியன் வெபர் வெண்கல பதக்கத்தை தட்டி சென்றனர்.

மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் அதிகப்பட்சமாக 78.72 மீட்டர் தூரம் மட்டுமே வீசி 10 இடத்தை பிடித்தார். இதற்கு முன்னதாக, அஞ்சு பாபி ஜார்ஜ் உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய வீராங்கனையாகவும், 2003 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்தை வென்ற முதல் வீரராகவும் இருந்தார்.

சரியாக, 19 ஆண்டுகளுக்கு பிறகு நீரஜ் சோப்ரா ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இன்று இந்தியாவில் ஏக்கத்தை பூர்த்தி செய்துள்ளார்.