2021 ஆம் ஆண்டை வரவேற்கும் ரோபோ டான்ஸ்- வைராலாகும் வீடியோ
வரும் 2021 ஐ வரவேற்கும் விதமாக Do You Love Me என்கிற பாப் பாடலுக்கு சில ரோபோக்கள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பாஸ்டன் டைனமிக்ஸ் ரோபோடிக்ஸ் நிறுவனம், பலவிதமான ரோபோக்களை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில் வரும் 2021 ஐ வரவேற்கும் விதமாக அந்த வீடியோவில், ரோபோக்கள் அனைத்தும் இசையின் வேகத்துக்கு ஏற்ப குதித்தும், தாண்டியும், சுழன்றும் நடனம் ஆடுகின்றன.இதன் மூலம் ரோபோக்கள் மிக வேகமாக மனிதனைப் போல சுயமாக செயல்பட முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவிர அந்த ரோபோக்கள் குழுவாக இணைந்து நடனம் ஆடுவதன் மூலம், பல்வேறு ரோபோக்கள் இணைந்து செயல்படுவதும் சாத்தியமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், 2020 ஆண்டு கொரோனா முடக்கத்தினால் துவண்டு கிடந்த மக்களை 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக ரோபோ நடனத்தை வெளியிட்டு , பாஸ்டன் டைனமிக்ஸ் புதிய நம்பிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Not CGI, true robots, dancing in a sort of rock'n'roll 2049 with the whole crew at #BostonDynamics [full video, with music 'Do You Love Me', The Contours: https://t.co/TsUNAsPrnn] pic.twitter.com/sSbbo9Xa24
— Massimo (@Rainmaker1973) December 29, 2020