குளத்தில் கட்டு கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள் - பார்வையிட்ட மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குளத்திற்குள் தூருவாரும்பொழுது கட்டு கட்டாக பணம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குளம்
நாகர்கோவிலை அடுத்த வேம்பனூர் பாசனக்குளம் மற்றும் அதைசுற்றியுள்ள வயல்கள் உள்ளிட்ட ஈரநிலங்களுக்கு சமீபத்தில் ராம்சார் குறியீடு கிடைக்கப் பெற்றது. தற்போது குளம் வற்றியுள்ள நிலையில், குளத்தை தூர்வாரும் பணிகள் நடந்து வந்தன.
இதற்காக அப்பகுதி இளைஞர்கள் பணியில் ஈடுபட்டு தூர்வாரிய பொழுது அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றினர். அப்பொழுது 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சுமார் 20 கட்டுகள் கிடந்துள்ளது.
அதிர்ச்சியில் மக்கள்
இந்நிலையில், அப்பகுதி மக்கள் இதனை வந்து பார்வையிட்டு அதிர்ந்த மக்கள் அதனை மீட்டனர். அப்பொழுது இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நோட்டுக் கட்டுகளை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அது குழந்தைகள் விளையாடுவதற்கு உருவாக்கப்பட்ட டம்மி நோட்டுகள் என்பது தெரியவந்தது. இருப்பினும் குளத்திலிருந்து 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் காட்டுத் தீயாகப் பரவியது.
அதனால் நிறைய பேர் அங்கு வைக்கப்பட்டிருந்த டம்மி நோட்டுகளை உண்மை எனப் பார்த்து விட்டு அதிர்ச்சியில் அங்கிருந்து சென்றனர்.