டாஸ்மாக்கில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்க கூடாது என்று சொல்லவில்லை - அமைச்சர் விளக்கம்
டாஸ்மாக்கில் 2 ஆயிரம் ரூபாய் வாங்கக் கூடாது என டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறும் ஆர்பிஐ
பொதுமக்களிடம் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி, வரும் 23-ம் தேதி முதல், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி விளக்கம்
இதற்கிடையே டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகின.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’முற்றிலும் தவறான செய்தி, இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை’’ என குறிப்பிட்டுள்ளார்.