2000 கோடி போதை கடத்தல் விவகாரம் - பின்னணியில் திமுக முக்கிய புள்ளி...?
போதைப்பொருள் கடத்தல் கும்பலை டெல்லி போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு பின்னணியில் திமுக நிர்வாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடத்தல் கும்பல்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சூடோபெட்ரைன் (pseudoephedrine) என்ற வேதிப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்த நாடுகளைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து, இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இந்த வேதிப்பொருள் மெத் எனும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருளாகும். மேலும், இந்த வேதிப்பொருள் தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகி
இந்த கடத்தலில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பின்னணியில் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவரை உடனடியாக நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் துரை முருகன். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.