200 ஆண்டுகளுக்கு பின் பிறந்த பெண் குழந்தை! மேளதாளத்துடன் வரவேற்ற குடும்பம்
After 200 Years Girl Born in Family: இந்தியாவின் மகாராஷ்டிராவின் மாநிலத்தில் வசிக்கும் தஹிபாலே குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் குழந்தை பிறந்ததை திருவிழாவாக கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் ஐந்து தலைமுறைகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்துள்ளது.
அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக பெண் குழந்தை பிறக்கவில்லை, இதனால் பெண் குழந்தைக்காக ஒட்டுமொத்த குடும்பமே ஏங்கித்தவித்தது.
இந்நிலையில் தஹிபாலே குடும்பத்தை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது, இதனால் ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.
அக்குழந்தைக்கு கார்கி என பெயரிட்டதுடன் மருத்துவமனையில் இருந்து வீடு வரும் வரை கொண்டாட்டங்களுடன் வரவேற்றனர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை தேரில் தாயும், சேயும் அமர்நதிருக்க மேளதாளங்கள் முழங்க குடும்பத்தினர் நடனமாடினர்.
வீடு வரும்வரை மலர்தூவி குழந்தையை வரவேற்றனர், பெண் குழந்தை சிறந்த சொத்து, பெண் பிறப்பை கொண்டாடவே இவ்வாறு செய்தோம் என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
