எருமையின் பாலில் தயிர் பச்சடி - மருத்துமனையில் கதறிய மக்கள்
200-க்கும் மேற்பட்டோர் பீதியில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தயிர் பச்சடி
உத்தரபிரதேசம், பிப்ரவுல் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பரிமாறப்பட்ட தயிர் பச்சடியில் சேர்க்கப்பட்ட தயிர், வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாக செய்தி பரவியது.

உடனே 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளூர் சுகாதார நிலையத்தில் திரண்டு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மக்கள் பீதி
வெறிநாய் கடித்து உயிரிழந்த எருமை மாடு புதைக்கப்பட்டதால் பிரேத பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
அதேநேரம், நாய் கடித்து உயிரிழந்த மாட்டின் பாலை காய்ச்சி அருந்தும்போது ரேபிஸ் தொற்று பரவுவதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் இல்லை எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுகாதாரத் துறையினர் கிராம மக்களுக்கு ரேபிஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.