200 யூனிட் இலவச மின்சாரம்..ஜூலை 1 முதல் நடைமுறை : மகிழ்ச்சியில் பொதுமக்கள்
கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று விதான்சௌதா மண்டபத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

மின்சாரம் இலவசம்
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில், தற்பொழுது கர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நாங்கள் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தலின் போது நாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதிகளையும் முழுமையாக விவாதித்தோம். இந்த 5 உத்தரவாதங்களும் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், என்று சித்தராமையா கூறினார்.