கொச்சியில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் கடத்தல் - 6 ஈரானியர்கள் கைது

Kerala India
By Nandhini Oct 08, 2022 05:18 AM GMT
Report

பாகிஸ்தானின் ஹாடி சலீம் நெட்வொர்க்கால் கொச்சியில் ரூ. 1200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் கடத்தலில் 6 ஈரானியர்கள் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

200 கிலோ ஹெராயின் கடத்தல்

இந்தியாவின், கேரளாவில் உள்ள கொச்சி கடற்கரையில் ஈரானிய மீன்பிடி கப்பலிலிருந்து 200 கிலோ ஆப்கானிஸ்தான் ஹெராயினை இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) கைப்பற்றியுள்ளனர்.

கேரளா, கொச்சி, காரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கப்பல் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதை இந்திய கடற்படையினர் அந்த கப்பலை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில், சுமார் "ரூ. 1200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த கப்பலில் இருந்த 6 ஈரானியர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானுக்கு படகு மூலம் சரக்குகளை கொண்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.கே. சிங் கூறுகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த படகுதான் அதன் சரக்குகளை நடுக்கடலில் ஈரானிய கப்பலுக்கு மாற்றியது. படகு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சரக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹாடி சலீம் நெட்வொர்க்கால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நெட்வொர்க் இந்தியாவுக்கு ஹெராயின், சரஸ், மெத்தம்பேட்டமைன் ஆகியவற்றை வழங்குகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஈரானின் கொனாரக் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடமிருந்து படகு, 3 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.    

200-kg-of-afghan-heroin-kochi