20 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே வைரஸ் கலக்கத்தில் அமெரிக்கா!

monkeypox 20years texasresident
By Irumporai Jul 17, 2021 01:22 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அரிய மங்கிபாக்ஸ் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியாவிலிருந்து அமெரிக்க வந்துள்ளார் பின்னர் கொஞ்ச நாட்களில் அந்த நபருக்கு காய்ச்சல் வந்ததால் பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

அப்போது சோதனை முடிவில் அவருக்கு மன்கிபாக்ஸ் வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி:

பாதிக்கப்பட்ட நபர் லாகோஸ் நகரத்திலிருந்து பயணத்தை தொடங்கி, நைஜீரியா, டல்லாஸ் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார்.

தற்போது இவருக்கு டல்லாஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இவருடன் விமானத்தில் பயணித்த மற்ற நபர்களை தொடர்பு கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக கூறியுள்ளார்.

மன்கிபாக்ஸ் வைரஸ் என்பது பெரியம்மையுடன் தொடர்புடைய பாதிப்பு. இது அரிய வகையில் ஏற்படக்கூடிய வைரஸ்தான் .

ஆனால் இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும். முதலில் காய்ச்சல் ஏற்படும். இதனை தொடர்ந்து சிறிய கட்டிகள் போன்ற வீக்கம் முகம் மற்றும் உடல் முழுவதும் பரவ ஆரம்பிக்கும்.

இந்த வைரஸின் தாக்கம் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று இந்த மையம் தெரிவித்துள்ளது