20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த துணை நடிகர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!
பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து வந்த துணை நடிகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கீழ்பாக்கம் மில்லர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முகமது ஷயாத்.
மாடலிங் தொழில் செய்து வரும் இவர் ஹுக்கா எனும் போதை பழக்கத்திற்கு அடிமையானார். தொழில் ரீதியாக தன்னுடன் பழகி வந்த துணை நடிகைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார்.
பெண்களை பண்னை வீடு,நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதற்காகவே தன் வீட்டில் ஒரு அறையை தயார் செய்து அந்த அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை செல்போனில் ரகசியமாக படம் எடுத்து மிரட்டி பணம்,நகை பறித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தங்கள் வாழ்க்கையை சீரிழித்து விட்டதாக கூறி முகமது ஹயாத்துக்கு எதிராக 3 பெண்கள் ஆதாரத்துடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகார் குறித்து வேப்பேரி போலீசார் விசாரித்து வந்தனர்.இதையடுத்து மார்ச் 24ம் தேதி தன்னுடன் பழகிய பெண்ணை உடற்பயிற்சி கூடம் வரச்சொல்லி பணம் பறிக்க முயன்ற போது,அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.அதில் 20 பெண்களை அனுபவித்து இருக்கிறேன் என்று வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இவரை ஓராண்டு ஜாமினில் வெளியே வராதபடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.