தொடரும் கொரோனா தொற்று பாதிப்பு - ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் உயிரிழப்பு

COVID-19 China Death
By Thahir Jan 09, 2023 07:20 AM GMT
Report

சீனாவில் கொரோனா பரவலால் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று 

சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு போடப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதனால் தொற்று பரவலும், உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்து வருகின்றன.

20 scientists lost their lives in a single month

ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் உயிரிழப்பு 

மேலும் இதனால் சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

900-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணிபுரியும் சீனாவின் மிகவும் புகழ்பெற்ற என்ஜினீயரிங் அகாடமியான இதில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும்.

மேலும் ஒரு மாதத்துக்குள் இவ்வளவு முக்கிய பிரபலங்கள் உயிரிழந்திருப்பது சீனாவில் முதல் முறையாக இருப்பதால் நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.