விருத்தாசலத்தில் 20க்கும் மேற்பட்ட சாலைகளுக்கு சீல்... சுகாதாரத்துறையினர் அதிரடி...
விருத்தாசலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள முக்கிய சாலைகளுக்கு சுகாதார துறையினர் சீல் வைத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊரக பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிப்பு அதிகமாக உள்ள ஆலடிரோடு, நாச்சியார்பேட்டை, பெரியார் நகர் ஆகிய பகுதிகள் இரும்பு தகடுகளால் மூடி,சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலை கல்லூரிகளில் 180 பேர் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விருத்தாசலம் நகரில் மட்டும் நேற்று முன்தினம் 33 பேருக்கு கொரோன நோய் தோற்று உறுதியானது.
இதில் அதிக பாதிப்பு உறுதியான பழமலைநாதர் நகர், ஆயிரம் தெரு, முல்லை நகர், வி.என்.ஆர் நகர், ராமதாஸ் நகர், பெரியார் நகர் வடக்கு, பெரியார் நகர் தெற்கு பகுதிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் அடங்கிய குழுவினர் நேற்று சீல் வைத்தனர். முன்னதாக அப்பகுதிகளில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.முக்கிய சாலைகளில் சுகாதாரத் துறையினர் சீல் வைத்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர்.