பேருந்தில் பற்றி எரிந்த தீ - 20 பேர் உடல் கருகி பலி!

Rajasthan Accident Death
By Sumathi Oct 15, 2025 08:50 AM GMT
Report

பேருந்து தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து

ராஜஸ்தான், ஜோத்பூர் - ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.

rajasthan

இந்நிலையில், ராஜஸ்தான் பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜோத்பூரில் நடைபெற்ற பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ குறிப்பிட்டுள்ளார்.

பாத்ரூம் கூட போக முடியல; ரிசர்வ் பெட்டியில் ஓசி பயணம் - வீடியோ வெளியிட்ட பெண்கள்!

பாத்ரூம் கூட போக முடியல; ரிசர்வ் பெட்டியில் ஓசி பயணம் - வீடியோ வெளியிட்ட பெண்கள்!

20 பேர் பலி

மேலும், பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பேருந்தில் பற்றி எரிந்த தீ - 20 பேர் உடல் கருகி பலி! | 20 People Died In Rajasthan Bus Fire Accident

இதில், செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது மனைவி, மூன்று குழந்தைகள் என குடும்பமே உயிரிழந்தனர். மகேந்திரா ஜெய்சால்மரில் உள்ள ஒரு ராணுவ வெடிமருந்து கிடங்கில் பணிபுரிந்து வந்த நிலையில்,

தீபாவளியைக் கொண்டாட நகரில் இருந்து சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார் . அப்போது இந்த துயரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.