20 ஓவர் உலக கோப்பை : இந்தியா ஆஸ்திரேலியா இன்று மோதல்

T20 World Cup 2022
By Irumporai Oct 17, 2022 03:47 AM GMT
Report

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதன்படி இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை : இந்தியா ஆஸ்திரேலியா இன்று மோதல் | 20 Over World Cup India Vs Australia Clash Today

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் இந்த பயிற்சி ஆட்டத்தில் களம் காணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஆர்வம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு அணியுடன் இணைந்து விட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் பயிற்சி களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளார். 

இந்தியா அணி இந்த இரண்டு பயிற்சிப் போட்டிகளையும் சரியாக பயன்படுத்தி நல்ல ஆட்டத்தை வெளிப்படுததும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இந்தப் பயிற்சிப் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று அசத்தும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்