அதிகாலையில் பறிபோன அப்பாவி உயிர்கள்.. கண் சிமிட்டும் நொடியில் நடந்த கொடூர சம்பவம்!

Cyber Attack Pakistan Crime
By Vidhya Senthil Oct 11, 2024 05:58 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் 

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், உள்ள டுகி மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது . அந்த வகையில் இன்று அதிகாலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல், பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

pakistan

அப்போது, அவர்கள் மீது ஆயுதம் ஏந்திய மர்ப நபர்கள் சுரங்கத்தின் மீது ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில், சுரங்கத்தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இடுப்பு தெரிய ஆடை; விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள் - வீடியோவில் குமுறல்

இடுப்பு தெரிய ஆடை; விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள் - வீடியோவில் குமுறல்

இந்த சம்பத்தில் 7 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பயங்கரவாதிகள்

மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பலுசிஸ்தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகிறது.

attack

முன்னதாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.