பற்றவைத்த நிர்மல் குமார் : இணையத்தில் டிரெண்ட் ஆகும் #420மலை

BJP K. Annamalai
By Irumporai Mar 06, 2023 07:50 AM GMT
Report

அண்ணாமலையினை 420 என்று விமர்சனம் செய்த பாஜக நிர்மல் குமார் கட்சியில்,இருந்து விலகி உள்ளார் , ஆகவே தற்போது இணையத்தில் #420 அண்ணாமலை என்ற வார்த்தை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பதவி விலகிய நிரமல்குமார்

பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை அளித்துள்ள பதில் பதிவில் : அன்பு சகோதரர் திரு நிர்மல்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும். என்று குறிப்பிட்டு உள்ளார்.

பற்றவைத்த நிர்மல் குமார் : இணையத்தில் டிரெண்ட் ஆகும் #420மலை | 20 Malai Is Trending After Bjp Nirmal Kuma

நிர்மல் குமார் பதவி விலகலுக்கு முக்கிய காரணம் பாஜக கட்சி கூட்டம் ஒன்றில் அண்ணாமலை நிர்மல் குமாரை தாக்கும் விதமாக பேசியதாக கூறப்படுகின்றது ,

பற்றவைத்த நிர்மல் குமார் : இணையத்தில் டிரெண்ட் ஆகும் #420மலை | 20 Malai Is Trending After Bjp Nirmal Kuma

இதனால் தான் நிர்மல் குமார் கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்த கருத்தில் பாஜக மாநில ஐடி அணியின் தலைவர் ,

பாஜக மாநில தலைவரின் இன்னொரு முகத்தை #420மலை என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். கட்சித் தலைவர் பதவியிலேயே இவ்வளவு ஊழல்! இவர்கள் எல்லாம் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்நாட்டை மொத்தமாக விற்றுவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பதில்

தற்போது அண்ணாமலை #420 என்கிற டேக் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அண்ணாமலை தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில்

பாஜகவில் இருந்து பிரிந்து சென்றிருக்கும் திரு.நிர்மல் குமார் விடுத்திருந்த அறிக்கையைப் படித்தேன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்து கொண்டிருந்த நேரத்தில், அவர் குழப்பத்தில் இருந்திருக்கிறார் , அவதூறு பரப்புகிறவர்களை விரைவில் மக்கள் அடையாளம் காண்பார்கள் என தெரிவித்துள்ளார்.