தீபாவளி பண்டிகை; சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 20 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 20 லட்சம் பேர் பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகாலை முதல் புத்தடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில்,தித்திக்குமும் தீபாவளியை தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருகளுக்கு சென்றனர்.
20 லட்சம் பேர் பயணம்
சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலில் 12 லட்சம் பேரும், பேருந்துகளில் 5 லட்சம் பேரும் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கார் மற்றும் விமானங்களில் 3 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.