ஹஜ் பயணம் சென்ற 20 பேர் பலி : சவுதி அரேபியாவில் பரபரப்பு
சவுதி அரேபியாவில் புனித மக்காவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்காபயணம்
இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில், பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 29 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபிடித்து எரிந்த பேருந்து
பேருந்து, புனித நகரமான மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் பாலத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டதாக அங்கு உள்ள உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முஇந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும், மேலும் மொத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29 என கூறப்படுகின்றது அந்த பேருந்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் சவுதி அரேபியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.