20 பெண்களை பாலியல் வன்கொடுமை - கைதான பிரபல மாடல் ‘காதல் மன்னன்’ கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது சையத். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். விளம்பரம் மற்றும் டிவி சீரியலிலும் இவர் நடித்து வந்துள்ளார்.
முகமது சையத் பணிபுரியும் மாடலிங் துறையில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலிக்கும்போது அப்பெண்ணிடம் முகமது சையத் நெருக்கமாக இருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, சமீபகாலமாக அப்பெண்ணை முகமது சையத் பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதன் பின்பு, காதலி வேப்பேரி போலீசாரிடம் முகமது சையத் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் முகமது சையத்தை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணையில் முகமது சையத் கொடுத்து வாக்குமூலம் -
நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். நான் அழகாக இருப்பதால் என்னை நான் ரசிக்க ஆரம்பித்தேன். பள்ளிப்பருவத்திலே பாலியல் ரீதியாக உறவு வைக்க ஆசைப்பட்டேன். நான் கல்லூரி படிக்கும்போது நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு இருந்தது.
இதனால் நான் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன். அந்த மாடலிங் துறையில் பல பெண்களிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் அழகை கண்டு பல பெண்கள் மயங்கினர்.
அவர்களுடன் நான் படுக்கையை பகிர்ந்து கொண்டேன். என் காம வலையில் சிக்காத பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி படுக்கைக்கு அழைத்து வந்துவிடுவேன்.
தன்னுடன் வேலை செய்யும் பெண்கள், இன்ஸ்டா மற்றும் பேஸ் புக் மூலம் அறிமுகமான பெண்களையும் காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளேன். என் அழகில் மயங்கிய பெண்கள் எனக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்கள்.
இதையே ஒரு பிஸினசாக செய்யலாம் என்று நினைத்து இறங்கினேன். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் எனக்கு நிறைய பணம், இன்பம் கிடைத்தது என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது முகமது சையத் மீது 3 பெண்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், முகமது சையத் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.