சென்னையில் பரபரப்பு - 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல விளம்பர மாடல் கைது
சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது சையத். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். விளம்பரம் மற்றும் டிவி சீரியலிலும் இவர் நடித்து வந்துள்ளார்.
முகமது சையத் பணிபுரியும் மாடலிங் துறையில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலிக்கும்போது அப்பெண்ணிடம் முகமது சையத் நெருக்கமாக இருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, சமீபகாலமாக அப்பெண்ணை முகமது சையத் பார்ப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதன் பின்பு, காதலி வேப்பேரி போலீசாரிடம் முகமது சையத் மீது புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் முகமது சையத்தை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
முகமது சையத், தன்னுடன் வேலை செய்யும் பெண்களையும், இன்ஸ்டா மற்றும் பேஸ் புக் மூலம் அறிமுகமான பெண்களையும் காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.
கிட்டத்தட்ட 20 பெண்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது முகமது சையத் மீது மேலும் 3 பெண்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், முகமது சையத் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.