நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை

Narendra Modi
By Thahir Aug 14, 2022 03:05 AM GMT
Report

தங்கள் வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுங்கள் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில் நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகியுள்ளது.

20 கோடி தேசிய கொடிகள் விற்பனை

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டது.

Independence Day

பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த கொடிகளை வாங்கினார்கள். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கொடிகளை வாங்கி சென்று தங்கள் வீடுகளில் ஏற்றினார்கள் .

பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை மொத்தம் இந்தியா முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் விற்பனை ஆகி உள்ளதாக கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.