மலைபோல் குவிந்து கிடந்த பணம் ; அமைச்சர் பணியாளர் வீட்டில் ஷாக் - அமலாக்கத்துறை அதிரடி!

India Jharkhand Enforcement Directorate
By Swetha May 07, 2024 10:17 AM GMT
Report

ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கணக்கில்வராத ரூ.20 கோடி பறிமுதல்.

மலைபோல்  பணம் 

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஊரக வளர்ச்சித்துறையில் பொறியாளராக இருந்த வீரேந்திர ராம் வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மலைபோல் குவிந்து கிடந்த பணம் ; அமைச்சர் பணியாளர் வீட்டில் ஷாக் - அமலாக்கத்துறை அதிரடி! | 20 Crore Found In The House Of The Ministers Aide

அப்படி பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், நிலையில், ஜார்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலத்தின் தனிச் செயலாளர் சஞ்சீவ் லால் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில்வராத ரூ.20 கோடி பணம் கட்டுக்கட்டாக சிக்கியது.

அமலாக்குத்துறை 

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அறை ஒன்றில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி பேசியுள்ளார்.

மலைபோல் குவிந்து கிடந்த பணம் ; அமைச்சர் பணியாளர் வீட்டில் ஷாக் - அமலாக்கத்துறை அதிரடி! | 20 Crore Found In The House Of The Ministers Aide

அதில், “அவர்கள் அனைவரும் கொள்ளையடிப்பவர்கள். லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஷிபு சோரன் குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடிக்கும் வேலையை செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக, அரசு வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.