20 மாட்டு வண்டியில் 200 சீர் வரிசை... இணையத்தில் ட்ரெண்டான தாய்மாமன்
திண்டுக்கல் மாவட்டத்தில் தாய்மாமன் ஒருவர் தனது அக்கா மகளுக்கு சீர் கொண்டு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகளுடன் பிறந்த ஆண்கள் சீர் செய்வதற்கு தயங்குகின்றனர். மேலும் அந்த பழக்க வழக்கத்தையும் தட்டிக் கழிக்கவும் செய்கின்றனர்.
ஆனால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் தாய்மாமன் கொண்டு வந்து இறக்கிய சீர்வரிசை பரபரப்பாக பேசப்படுகின்றது.

தாய்மாமன் சீர்
திண்டுக்கல் மாவட்டத்தில் அருகே உள்ள கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்- மாலியபுரம் தம்பதிகள். இவர்களுக்கு 2 குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றுள்ளது.
குறித்த காதணி விழாவிற்கு தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் தாய்மாமன் சீர் கொண்டு வந்துள்ளார். மாலியபுரத்தின் சகோதரன் தங்கைக்கு 20 மாட்டு வண்டியில் 200க்கும் மேற்பட்ட சீர்வரிசையினை இறக்கியுள்ளார்.
சீதனமாக வந்த வெள்ளி பாத்திரம்
20 மாட்டுவண்டிகள் ஊர்வலமாக சென்றது முந்தைய காலத்து, நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியுள்ளது. தமிழ் மரபை பிரதிபலிக்கும் விதமாக இரட்டை சீர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது பித்தளை பானைகள், அண்டாக்கள், பித்தலை குடங்கள் உட்பட பல பொருட்களுடன், மளிகை சாமான்கள், இனிப்பு கார வகைகள் என கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் பித்தளையில் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் இரண்டு இரண்டாக கொண்டுவரப்படடுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழக கலைகளான தாரை தப்பட்டை, வாண வேடிக்கை, தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை என பாரம்பரிய கலைகள் பல அரங்கேறியுள்ளது.
மண்ணின் கலைகள், மாடுகளின் மணியோசையைக் கண்ட கிராமமக்கள் வியப்பில் ஊர்வலத்தை பார்த்து ரசித்துள்ளனர். பணம் மற்றும் ஆடம்பரம் எழும்பி நிற்கும் இந்த சூழ்நிலையில், இம்மாதிரியான நிகழ்வுகள் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.