கண்ணை மறைத்த காதல்; ஒரு பெண்ணுக்காக மோதிக் கொண்ட 2 இளைஞர்கள்
ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
ஒரே பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே உள்ள காரமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் கோகுல கண்ணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இதேபோல் கங்காணிபட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரும் அந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோகுல கண்ணன் தன் காதலியை காதலித்து வந்தது பிரகாஷ்-க்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் தனது நண்பர்களுடன் சென்று கோகுல கண்ணனை மிரட்டி உள்ளார்.
இளைஞர்கள் கைது
அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மோதிக் கொண்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பெண்ணிற்காக இரண்டு இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.