2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூர பெரியப்பா : அரங்கேற்றிய நாடகம் என்னன்னு தெரியுமா?
2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய பெரியப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு, தொட்டபள்ளாப்புராவில் தனியாக வசித்து வரும் தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபள்ளாப்புராவுக்கு வந்த நெரலூர் கேட் பகுதியை சேர்ந்த குழந்தையின் பெரியப்பா தீபு குழந்தையை நெரலூர் கேட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது 2 வயது குழந்தை என்றும் பாராமல் பெரியப்பா ஸ்தானத்தை மறந்த தீபு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
வலியினால் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளது. உடனே போலீஸ் நிலையம் சென்ற தீபு, காரில் வரும்போது சகோதரர் குழந்தை கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
மேலும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தையின் பெரியப்பாவான தீபுவை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்ததை அடுத்து தீபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.