2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 14 வயது சிறுமி கர்ப்பிணியாக மீட்பு! என்ன நடந்தது?
கேரளாவில் 2 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 14வயது சிறுமி தற்போது மதுரையில் கர்ப்பிணியாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு காணமால் போன 14 வயது சிறுமியை மதுரையில் போலீசார் மீட்டுள்ளனர்.
சிறுமியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுமி தனது காதல் கணவருடன் வாழ்ந்து வருவதும், தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு தனது தாயுடன் கேட்டரிங் வேலை செய்து வந்த வாலிபரை அந்த 14 வயது சிறுமி காதலித்து வந்துள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட காதலால் இருவரும் கேரளாவில் இருந்து தப்பியோடி தற்போது மதுரையில் குடித்தனம் நடத்தி வருவதாகவும் தெரியவந்தது.
தற்போது 16 வயதாகும் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவரை மீட்ட போலீசார் மருத்துவ
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.