2 வயது சிறுமியை 40 இடத்தில் கடித்து குதறிய நாய் - தொடரும் கொடுமை
2 வயது சிறுமி நாய் கடித்து குதறியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடி
சூரத், கூலித்தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் 2 வயது சிறுமி. இவரை வீட்டருகே இருந்த தெரு நாய்கள் கடித்துக் குதறின. உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும்,

குழந்தையின் உடலில் இருந்த 40க்கும் மேற்பட்ட நாய்க்கடிகளால் சிகிச்சை அளிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. தடுப்பூசிகள், அறுவை சிகிச்சைகள் என 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த போராட்டத்திலும் குழந்தை பரிதாபமாக இறந்தது.
சிறுமி பலி
இதனையடுத்து, சூரத் முனிசிபாலிட்டி அமைப்பு தெரு நாய்களுக்கு கருத்தடை நடவடிக்கைகயை முடுக்கி விட்டுள்ளது.
தினசரி 30 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது.