அருமையாக தபலா வாசிக்கும் இரண்டு வயது சிறுமி.. இந்திய சாதனை புத்தகத்தில் இடம்

Karnataka
By Sakthi Raj Oct 27, 2026 05:49 AM GMT
Report

சிறு குழந்தைகள் என்றாலே அழகுதான். அவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயல்களும் நம்மை ரசிக்கும் படி செய்கிறது. இருப்பினும் ஒரு சில குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக அளவில் திறமை கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

அப்படியாக, கர்நாடகாவில் உத்திர கன்னட மாவட்டத்தின் ஹொன்னாவாரா பகுதியை சேர்ந்த வெறும் இரண்டு வயது பத்து மாதங்கள் நிரம்பிய சிறுமி ஸ்வாரஸ்ரீ ஹெக்டே அருமையாக தபலா வாசிக்கக்கூடிய திறமையை கொண்டிருக்கிறார்.

அருமையாக தபலா வாசிக்கும் இரண்டு வயது சிறுமி.. இந்திய சாதனை புத்தகத்தில் இடம் | 2 Year Old Girl Creates Tabla Indian Book Record

அவர் தற்பொழுது இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. ஸ்வாரஸ்ரீ ஹெக்டே தந்தை குருராஜ் ஹெக்டே புகழ் பெற்ற தபலா கலைஞர், தாய் ஸ்ரீலதா ஒரு ஹிந்துஸ்தானி பாடகி மற்றும் ஆங்கில பேராசிரியராக பணிபுரிகிறார்.

தங்கள் மகள் ஒரு வயதிலேயே முதல் தபலாவில் ஆர்வம் காட்டியதோடு அதன் மீது உறங்குவாள் என்று பெற்றோர்கள் சொல்கின்றனர்.

அதோடு, பெற்றோர்கள் குழந்தையின் ஆர்வத்தை கவனித்து மற்ற மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ஸ்வாரஸ்ரீ ஹெக்டே தன் அருகில் அமர வைத்து பயிற்சி கொடுத்திருக்கிறார்.

அருமையாக தபலா வாசிக்கும் இரண்டு வயது சிறுமி.. இந்திய சாதனை புத்தகத்தில் இடம் | 2 Year Old Girl Creates Tabla Indian Book Record

மேலும், அவளுக்கென்ன சிறிய தபலாக்களையும் பிரத்தியேகமாக தயாரித்து கொடுத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் பெயருக்கு ஏற்றார் போல ஸ்வாரஸ்ரீ ஹெக்டே 12 வகையான தாளங்களையும் அவற்றின் vocal recitation யும் எந்த தவறுகளும் இன்றி கற்று வாசித்து இளம் வயது தபலா கலைஞர் என்கின்ற சாதனையை படைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

தற்பொழுது ஸ்வரா ஸ்ரீ தபலா வாசிக்கக் கூடிய காணொளி சமூக ஊடங்களில் வைரலாக பரவி வருகிறது.