2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த நபர் - சிறையில் தற்கொலை
பெங்களூர், நெலூர் கிராமத்தை சேர்ந்தவர் தீபு. இவர் கார் ஓட்டுனாக வேலை பார்த்து வந்தார். உறவினர் ஒருவரின் 2 வயது குழந்தையிடம் அன்பாக பழகி வந்தார். தீபு மீது சந்தேகம் வராத குழந்தை பெற்றோர்கள் அவரிடம் குழந்தையை அவ்வப்போது விளையாட விட்டு வந்துள்ளனர்.
இதை சாதகமாக பயன்படுத்திய தீபு, கடந்த மாதம் 25ம் தேதி அந்த 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். பின்னர், காரிலிருந்து குழந்தை தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து, முதற்கட்ட விசாரணையில் போலீசார் தீபுவை பிடித்து விசாரித்தனர். அப்போது, குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்ததை தீபு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தீபு மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிறையில் உள்ள கழிவறைக்கு சென்ற தீபு, போர்வையை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதனை பார்த்து சிறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.