கூல் ட்ரிங்ஸ் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய் - 2 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்!
மண்எண்ணெய் குடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2 வயது குழந்தை
கன்னியாகுமரி மாவட்டம் செறுவல்லூர் தேவிகோடு பனச்சக்காலை பகுதியைச் சேர்ந்தவர் அனில் -அருணா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகிஅனிருத் ( வயது5), ஆரோன் (வயது2) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் அணிலுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படுத்தப்படையாக உள்ளார்.இதனால் தனது குடும்பத்தை அவரது மனைவி அருணா கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் உள்ள வீட்டில் உள்ள அறையில் கணவருடன் அருணா பேசிக் கொண்டிருந்தார்.அப்போது விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆரோன் சமையல் அறைக்குச் சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்துள்ளான்.
உயிரிழப்பு
பின்னர் குளிர்பானம் என நினைத்து குடிக்கவே சிறிது நேரத்தில் அலறி துடித்துள்ளார்.குழந்தையில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அருணா பார்த்த போது வாந்தியெடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருணா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை ஆரோன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.