2 வயது குழந்தையை வாயில் கவ்விய சிறுத்தை - சண்டையிட்டு போராடிய தாத்தா - பாட்டி
2 வயது பேரனை காப்பாற்ற சிறுத்தையிடம் சண்டையிட்ட தாத்தா - பாட்டி! கண்கலங்கும் வீடியோ மத்திய பிரதேசத்தில் தனது இரண்டு வயது பேரக் குழந்தையை காப்பாற்ற தாத்தாவும்- பாட்டியும் சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு குனோ நேஷனல் பார்க் அருகில் உள்ள துரா என்ற கிராமத்தில் தனது இரண்டு வயது பேர குழந்தையை காப்பாற்ற மிகப் பெரிய கொடூரமான சிறுத்தையுடன் அந்த தாத்தா பாட்டி இருவரும் சண்டையிட்டு உள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க பசந்தி பாய் குர்ஜார் என்பவர் தனது பேரக் குழந்தையுடன் வீட்டில் படுத்து கிடந்துள்ளார். அப்பொழுது சிறுத்தையின் சத்தமும் குழந்தையின் அழுகுரல் சத்தமும் கேட்டுள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்து கண்விழித்து பார்த்த பசந்தி பாய் சிறுத்தையின் வாயில் இருந்த குழந்தையை கண்டு மிரண்டு போனார். தன்னுடைய பேரனை காப்பாற்ற சிறுத்தையை காலால் எட்டி உதைத்து, குழந்தையை வாயில் இருந்து எடுக்க கடும் போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்த கதறல்களை கேட்டு அலறி அடித்து ஓடிவந்த கணவரும், மனைவிக்கு உதவியாக குழந்தையை மீட்க உயிரை பனயம் வைத்து போராடினர்.

அக்கம்பக்கத்தினர் ஆயுதங்களுடன் ஓடிவர, குழந்தையை கீழே போட்டுவிட்டு சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதனை தொடர்ந்து படுகாயமடைந்த அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.