2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - என்ஜின் தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - ஒருவர் உயிரிழப்பு
மத்திய பிரதேசம் மாநிலம் ஷாதூல் நகரில் உள்ள சிங்பூர் ரயில் நிலையத்தின் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியது, வந்த வேகத்தில் ஒரு என்ஜின் மீது மற்றொரு என்ஜின் ஏறியது. அதில் ஒரு என்ஜின் தீ பிடித்து எரிந்தது.
இச்சம்பவத்தில் இரு ரயில் ஓட்டுநர்களும் காயமடைந்தனர், அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரியவந்துள்ளது.
மேலும் இதில் 5 ரயில்வே ஊழியர்களும் காயமடைந்ததாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலியான ரயில்வே ஓட்டுநர் பீகார் மாநிலம், முசாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பிரசாத், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.