கல்லூரி மாடியிலேயே உல்லாசம் - வீடியோ வெளியானதால் மாணவன்-மாணவி விபரீத முடிவு!
நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதால் மாணவ,மாணவி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வீடியோ வைரல்
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும் மாணவிக்கும் பழக்கப் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாக செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் கால்லூரியின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு யாருக்கும் தெரியாமல் நெருக்கமாக இருந்துள்ளனர். இவர்கள் நெருக்கமாக இருப்பதை அருகில் உள்ள கட்டடத்தில் உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து கல்லூரியில் உள்ள பிற மாணவ மாணவிகளும் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதனால் அந்த வீடியோவில் உள்ள மாணவனும் மாணவியும் உடைந்து போயுள்ளனர்.
மாணவர்கள் தற்கொலை
இந்நிலையில் அவமானம் தாங்காமல் அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த மாணவனும் தற்கொலை செய்தார்.
மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால்தான் தற்கொலை செய்துகொண்டனர் என்று அறிந்த இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் வீடியோ எடுத்தது யார்?, சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.