பொடுகு பிரச்சனையால் +2 மாணவி தற்கொலை
பொடுகு பிரச்சனை காரணமாக பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பொடுகு பிரச்சனை
கரூர் மாவட்டம் ,வெண்ணைமலை பகுதியில் உள்ள அரசன்நகரை சேர்ந்தவர் குமார் இவருக்கு 17 வயதான ஸ்ரீனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீனா தன் பெற்றோர்களிடம் கூறியபோது அவர்கள் ஸ்ரீனாவுக்கு பாப் கட்டிங் செய்துவிட்டதாக கூறப்படுகிறது .
மாணவி தற்கொலை
இந்த பிரச்சனைகளால் கவலையடைந்த ஸ்ரீனா கடந்த 23 ஆம் தேதியன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீனாவின் பெற்றோர்கள் ஸ்ரீனாவை மீட்டு கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் ஸ்ரீனாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்ரீனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் .
இச்சம்பவம் பற்றி அறிந்த போலீசார் ஸ்ரீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் .
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .
பொடுகு பிரச்சசினை காரணமாக பிளஸ் 2 மாணவி உயிரிழந்துதிருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .