முடிந்த தொகுதி பங்கீடு.? மதிமுகவிற்கு 1+1 கொடுக்க திமுக முடிவு..?

Vaiko Tamil nadu DMK
By Karthick Mar 07, 2024 07:09 AM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, திமுக தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.

மக்களவை தேர்தல் கூட்டணி

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக போன்ற பிரதான கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

2-seats-for-mdmk-in-dmk-allaince

இதில், இன்னும் காங்கிரஸ் மற்றும் விசிகவிற்கு எத்தனை இடங்கள் என்பது முடிவாகாத நிலையில், மதிமுகவிற்கு 2 இடங்களை ஒதுக்கீடு செய்யவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

1+1

ஆனால், மதிமுக சார்பில் ஒரு ராஜ்ய சபா சீட் கோரிக்கை இருந்து வந்தது. மதிமுகவின் தலைவர் வைகோ, கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வருகின்றார். அவருக்கு தான் மீண்டும், மதிமுக கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டது.

2-seats-for-mdmk-in-dmk-allaince

இந்நிலையில், தற்போது புதிய செய்திகள் வெளிவந்துள்ளன. அதாவது திமுக கூட்டணியில், மதிமுகவிற்கு 1+1=2 1 லோக் சபா, 1 ராஜ்ய சபா இடங்களை ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

2-seats-for-mdmk-in-dmk-allaince

கடந்த முறை தேர்தலில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கட்சியின் கணேஷமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.