பட்டையை கிளப்பும் ரூ. 2 ஐஸ் கிரீம் கடை - அலைபோதும் கூட்டம் - வைரலாகும் வீடியோ

By Nandhini May 29, 2022 02:18 PM GMT
Report

மேற்கு மாம்பலத்தில் உள்ள வினூஸ் இக்லூவில் 2 ரூபாய்க்கு ஐஸ் கிரீம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான சுவைகளிலும் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.

ஐஸ்கிரீமை அதிக அளவில் வாங்க 8 ரூபாய் செலுத்தினாலே போதுமாம். இந்த கடையில் ஐஸ்கிரீமுடன் ரசகுல்லா மற்றும் பால்கோவாவும் வழங்கப்படுகிறதாம்.

இந்தக் கடைக்கு வரும் மக்கள் அனைவரும் இந்த ஐஸ்கிரீம் கடையை ‘ரெண்டு ரூபாய் ஐஸ்கிரீம் கடை’ என்று அழைக்கிறார்கள். சென்னையில் உள்ள அனைத்து ஐஸ்கிரீம் பிரியர்களுக்கு இந்தக் கடை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.